இடைநிறுத்தப்பட்ட ஜப்பானிய திட்டங்கள் மீண்டும் தொடங்குகின்றன!

#SriLanka #Project #Japan
Mayoorikka
1 year ago
இடைநிறுத்தப்பட்ட  ஜப்பானிய திட்டங்கள் மீண்டும் தொடங்குகின்றன!

தற்போது இடைநிறுத்தப்பட்ட திட்டங்களை மீண்டும் தொடங்குவது மற்றும் புதிய திட்டங்களை தொடங்குவது, ஜப்பான் இலகு ரயில் திட்டம் ஆகியவை கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளின் முன்னேற்றத்தை சார்ந்துள்ளது என்று ஜப்பானிய தூதரகம் தெரிவித்துள்ளது.

 ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் நிதி வசதிகளின் கீழ் ஆரம்பிக்கப்படவிருந்த 2.2 பில்லியன் அமெரிக்க டொலர் செலவில் ஆரம்பிக்கப்படவிருந்த இலகு ரயில் பாதையை மீள ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது. 

 மாலம்பே மற்றும் கொழும்பு கோட்டையை இணைக்கும் வகையில் இந்த பாதை அமைக்கப்படவுள்ளது. நல்லாட்சி அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்படுவதற்கு தீர்மானிக்கப்பட்ட இந்த திட்டத்தை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கம் நிறுத்துவதற்கு தீர்மானித்தது. 

சமீபத்தில் ஜப்பானுக்கு விஜயம் செய்திருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த திட்டத்தை மீள ஆரம்பிக்க முன்மொழிந்தார்.

 இலங்கையில் கடன் மறுசீரமைப்புச் செயற்பாடுகளில் கவனம் செலுத்தி தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ள திட்டங்களை எவ்வாறு மீள ஆரம்பிப்பது மற்றும் புதிய திட்டங்களை எவ்வாறு ஆரம்பிப்பது என்பது தொடர்பில் ஆராயவுள்ளதாக ஜப்பானிய தூதரகம் தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!