அதிரடியாக வெளியிடப்பட்ட ஜெயிலர் 2 படத்தின் டைட்டில் டீசர் (வீடியோ)
#Actor
#TamilCinema
#rajini kanth
#Movie
Prasu
3 hours ago
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2023 ஆண்டு வெளியான படம் ஜெயிலர். இந்த படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. வசூல் ரீதியாகவும் படம் வெற்றி பெற்றது.
இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்க, கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் தயாரித்திருந்தது. இந்த படத்தின் 2ம் பாகம் உருவாகும் என ஏற்கனவே நெல்சன் தெரிவித்திருந்தார்.
இதற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன. படத்தின் "ப்ரோமோ ஷூட்" பணிகள் கடந்த மாதம் நடைப்பெற்றது.
தற்போது ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடத்து வருகிறார். இந்நிலையில் ஜெயிலர் 2 திரைப்படத்தின் டைட்டில் டீசரை படக்குழு தற்பொழுது வெளியிட்டுள்ளது.
மேலதிக சினிமா செய்திகளை அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்