2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலை நடாத்துவதற்கு நடவடிக்கை!

#SriLanka #Sri Lanka President #Election
Mayoorikka
3 years ago
2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலை நடாத்துவதற்கு நடவடிக்கை!

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலை நடாத்துவதற்கான ஏற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

 அதற்கான முதல் கட்ட சந்திப்பு பல்வேறு தரப்பினருடன் ஜனாதிபதி செயலகத்தில் கடந்த. திங்கட்கிழமை இடம்பெற்றது.

அரசாங்கத்தின் வேலைத்திட்டம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவை உறுப்பினர்கள், அரசாங்கக் கட்சித் தலைவர்கள் மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாவட்டத் தலைவர்களை கடந்த திங்கட்கிழமை ஜனாதிபதி செயலகத்திற்கு அழைத்ததாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்தார்.

 பாதகமான நிலையில் இருந்த நாட்டின் பொருளாதாரம் தற்போது பூஜ்ஜிய நிலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி, எதிர்வரும் செப்டெம்பர் மாதத்திற்குள் அதனை செல்வ மட்டத்திற்கு கொண்டு வருமாறும் அமைச்சரவை மற்றும் அமைச்சர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். 

பொதுஜன பெரமுனவின் தலைவர்கள் மக்கள் மத்தியில் சென்று அரசாங்கத்தின் இந்த வேலைத்திட்டம் குறித்து மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

 கிராமத்திற்குச் சென்று எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்வதற்கான பின்னணியை தயார் செய்யுமாறும் ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4