இந்தியாவுடன் கைகோர்த்து நிற்போம்: ரயில் விபத்திற்கு ஜனாதிபதி இரங்கல்

#India #SriLanka #Accident #Train
Mayoorikka
3 years ago
இந்தியாவுடன் கைகோர்த்து நிற்போம்: ரயில் விபத்திற்கு ஜனாதிபதி இரங்கல்

இந்தியாவின் ஒடிசாவில் ரயில்கள் மோதுண்டதால் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், இந்திய அரசுக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இரங்கல் தெரிவித்துள்ளார். 

 துயரமான இச் சந்தர்ப்பத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு அனுதாபங்களை தெரிவிக்கும் அதேநேரம் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் தெரிவித்துள்ளார் . 

 ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு அனுப்பியுள்ள விசேட செய்தியில் துயரமான இந்த தருணத்தில் அயல் நாட்டவர்கள் என்ற வகையில் இலங்கை அரசாங்கமும் மக்களும் இந்தியாவுடன் கைகோர்த்து நிற்போம் எனவும் உறுதியளித்துள்ளார். 

 பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கும் அதேநேரம் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

 எதிர்பாராத விதமாக விபத்துக்கு முகம்கொடுத்துள்ள இந்திய அரசாங்கத்திற்கு வலிமையும் தைரியமும் கிட்ட வேண்டுமென பிரார்த்திப்பதாகவும் ஜனாதிபதியின் விசேட செய்தியில் குறிப்பிட்டுள்ளார்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4