களுத்துறை மாவட்டத்திற்கு இன்று இரவு கனமழை பெய்யும்

#SriLanka #weather #Rain #Lanka4
Kanimoli
3 years ago
களுத்துறை மாவட்டத்திற்கு இன்று இரவு கனமழை பெய்யும்

களுத்துறை மாவட்டத்திற்கு இன்று இரவு கனமழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி இன்று இரவு களுத்துறை மாவட்டத்தின் சில இடங்களில் 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான கடும் மழை பெய்யும் என குறித்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

 சப்ரகமுவ மாகாணம் மற்றும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

 இடியுடன் கூடிய மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களைக் கோருகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4