சாதனை பெண். காலனை வென்ற கணக்கு வேரும் விழுதாகியது இப்படி இன்னும் பல விழுதுகள்
09 வயதில் முள்ளிவாய்க்கால் பேரவலத்தை கடந்து வந்தவள். 16 வயதில் சுவிஸ் வந்தவள். மருத்துவர் ஆகப்போறாள்_ தமிழிசை ஆர்காவ் மாநிலத்தில் வசித்து வருகின்ற திரு .திருமதி கலைச்செழியன் வனஜா தம்பதிகளின் புதல்வி தமிழிசை என்கிற எங்கட பிள்ளையே இத்தகைய சாதனையை படைத்துள்ளார்.
#பதிவு கொஞ்சம் நீளம்தான் ஆனாலும். ஒருக்கா வாசித்து பாருங்கோ சிலிர்த்து போவீர்கள்___ தனது 09வயதில் 2009 முள்ளிவாய்க்கால் இறுதித்தருணம் வரை கடந்து பின்னர். க.பொ சாதரண தரம்வரை கொக்குவில் இந்துக்கல்லூரியில் கற்று 8A பெறுபேற்றினை பெற்றிருந்தாள்.
அப்பிடியே தனது 16 வயதில் சுவிஸ் நாட்டுக்கு புலம்பெயர்ந்து சுமார் ஒரு வருடம் மொழி படித்துக்கொண்டிருந்தபோது அவளது மொழியாற்றலை உணர்ந்த கல்வி நிர்வாகம் ( Gymnasium 🏫) தொடரலாம் என்ற அனுமதியுடன் தொடர்ந்தாள். அங்கும் அவள் சளைத்தவள் அல்ல என்பதை நிரூபித்து 06 மாத காலம் ஆசிரியர்துறையை தேர்ந்தெடுத்து கற்றுக்கொண்டிருந்தபோது.. #அவளது மனதில் மருத்துவத்துறைதான் எப்போதும் ஓடிக்கொண்டிருந்தது .விடவில்லை முயற்சியை தொடர்ந்தாள்.
அவளது மருத்துவத்துறை கனவை நனவாக்கினாள் . தற்போது #Basel பல்கலைக்கழகத்தில் முதலாம் வருடத்தை நிறைவு செய்து இரண்டாம் வருடத்தில் கால் பதித்துள்ளாள். #அபூர்வம் நடப்பதென்பதன்பது #உண்மைதான் இது மிக அபூர்வம். மிக குறுகிய காலத்தில் மொழி படித்து அதில் அதி திறனாய்வாகி மருத்துவத்துறையில் கால் பதிப்பதென்பது அதுவும் 2009 இல் அந்த முள்ளிவாய்க்காலில் மொத்த வலிகளையும் கண்ணாலே கண்டு வந்த பிள்ளை இந்த சாதனையை படைத்திருக்கிறாள் என்பது பாரட்டத்தக்கது .
#தமிழிசை சிறந்த பாடகி #இசையும் கற்கிறாள்.. மொழியைக்குறுகிய காலத்தில் படிக்க வேண்டுமென்ற ஓர்மத்துடன் இருந்த தமிழிசை இசைத்துறையயும். சமநேரத்தில் கற்று 04 ஆவது தரத்தில் சித்தியடைந்து 05 தரத்தை நோக்கி நகர்கிறாள். #மற்றொரு சிறப்பு__ இவளது தாயார் திருமதி வனஜா தமிழீழ நிழல் அரசின் மருத்துவப்பிரிவில் இறுதி வரை வைத்தியராக கடமையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. #இதிலிருந்து என்ன புரிகிறதென்றால்.. " விதைத்துக்கொண்டிரு முளைத்தால் மரம் இல்லையேல் உரம் " என்பதை எங்கள். தலைவன் செய்தது இன்று உரமாகிறது.
எம் தேசத்திற்கு அது வரமாகிறது.. இவளது தந்தையார் சிறந்த பண்பாளன் கடந்த மாதம் கூட ஊரி மாநிலத்தில் கண்டு கதைத்தேன். இது குறித்து எதுவும் பேசவில்லை . ஆனால் கடந்த எழுச்சிக்குயில் போட்டியில் " தமிழிசையைக்காணவில்லை என்று அவர்களது குடும்ப நண்பரிடம் கேட்டபோதுதான் அவர் சொன்ன தகவல்தான். அப்பிடியா ? தமிழிசை டொக்டரக்கு படிக்கிறாளா ? இப்ப வந்த பிள்ளையல்லவா ? என்று திகைப்புடன் கேட்டேன்..
அன்பானவர்களே ! இப்பதிவை இங்கு பதிவிடுவது தமிழிசைக்காக மட்டுமல்ல ஒரு குறிப்பிட்ட வயதில் வருகின்ற பிள்ளைகள் தொழிற்கல்வியைத்தேர்ந்தெடுப்பதுதான் சிறந்த வழி உயர்கல்வி சாத்தியமற்றது என்று நினைப்பவர்களுக்கானதும். முடிந்தால் விரும்பினால் அதிகம் பகிருங்கள். #ஒரு மட்டற்ற மகிழ்ச்சி என்பது யாதெனில்.
ஒரு பாடகியாக அறிமுகமாகிய எங்கள். தமிழிசையை சில வருடங்களில் பின் Dr_ கலைச்செழியன் தமிழிசை என்று பார்க்க போகிறோம்.என்கிறபோது உள்ளமெல்லாம் புளகாங்கிதம் பூத்துக்குலுங்குறது.. " எங்கட எங்கட என்று சொல்லி கொண்டாடி தீர்க்கும் ஒவ்வொன்றிலும். தமிழ்த்தேசியம் வலுப்பெற்று நிற்கும். ஆதலால் எங்கட தமிழிசைக்கு பலகோடி வாழ்த்துக்கள். " முயற்சி மெய்வருத்தக்கூலிதரும் என்பதை நன்குணர்ந்தவள் போலும் தமிழிசை.