வடக்கு கிழக்கில் பௌத்த ஆலயங்களை அமைப்பதை நிறுத்துவது குறித்து இறுதி முடிவு இல்லை!

#SriLanka #NorthernProvince #Tamil People
Mayoorikka
3 years ago
வடக்கு கிழக்கில் பௌத்த ஆலயங்களை அமைப்பதை நிறுத்துவது குறித்து இறுதி முடிவு இல்லை!

வடக்கு கிழக்கில் நிலங்களை கையகப்படுத்துதல் புதிய பௌத்த ஆலயங்களை அமைத்தல் போன்ற நடவடிக்கைகளை நிறுத்துமாறு ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க விடுத்த உத்தரவு குறித்து இன்னமும் இறுதிமுடிவை எடுக்கவில்லை என தொல்லியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 இந்த விவகாரம் குறித்து இன்னமும் இறுதிமுடிவை எடுக்கவில்லை என இலங்கையின் தொல்லியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் அனுரமனதுங்க தெரிவித்துள்ளார்.

 இந்த விடயம் குறித்து ஜனாதிபதியுடனான சந்திப்பின்போது ஆராயப்பட்டது நாங்கள் இது குறித்து இணக்கப்பாட்டிற்கு வரவில்லை அதேவேளை அதனை நிராகரிக்கவும் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.

 இது குறித்து நாங்கள் தொடர்ந்தும் ஆராய்ந்துவருகின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4