புயல் காரணமாக தமிழ்நாட்டில் வெப்ப அலை வீசும்; இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

#Rain #Tamilnews #Strom #Breakingnews #Summer #ImportantNews
Mani
1 year ago
புயல் காரணமாக தமிழ்நாட்டில் வெப்ப அலை வீசும்; இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

இந்திய வானிலை ஆய்வும் மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அரபிக்கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று இரவு 8.30 மணிக்கு புயலாக மாறியதாக தெரிவித்துள்ளது. வங்கதேசம் முன்மொழிந்த பைபோர்ஜாய் பெயர் என புயலுக்கு பெயரிடப்பட்டுள்ளது. அதற்கு பேரழிவு என்று அர்த்தமாகும்.

பைபோர்ஜாய் புயல் கோவாவுக்கு மேற்கு - தென்மேற்கு திசையில் 900 கிலோ மீட்டர் தொலைவிலும், மும்பைக்கு தென்மேற்கே ஆயிரத்து 100 கிலோ மீட்டர் தூரத்திலும் புயல் மையம் கொண்டுள்ளதாக கூறியுள்ளது.

மணிக்கு 5 கிலோ மீட்டர் வேகத்தில் நகரும் இந்த புயல், வடக்கு நோக்கி செல்கிறது எனவும், இதனால், தமிழ்நாட்டுக்கு எந்த பாதிப்பும் இருக்காது எனவும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

புயல் காரணமான அரபிக் கடல் பகுதியில் மணிக்கு 115 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் அடுத்த 4 நாட்களுக்கு அரபிக் கடல் பகுதிக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது.

இந்த நிலையில், தமிழ்நாட்டின் உட்பகுதியில் ஒரு சில இடங்களில் வெப்ப அலை வீசக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் 39 டிகிரி முதல் 41 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகும் என்றும் ஒரு சில இடங்களில் இயல்பிலிருந்து 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.