கைது செய்யப்பட்ட மகளிர் அணி தலைவி மற்றும் உதயசிவம் ஆகியோருக்கு பிணை

#SriLanka #Arrest #Court Order
Mayoorikka
3 years ago
கைது செய்யப்பட்ட  மகளிர் அணி தலைவி மற்றும் உதயசிவம் ஆகியோருக்கு பிணை

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மகளிர் அணி தலைவி மற்றும் உதய சிவம் ஆகியோருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. 

குறித்த இருவர் தொடர்பான வழக்கு இன்று மன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது விசாரணைக்குட்படுத்திய நீதவான் குறித்த இரண்டு சந்தேக நபர்களிற்கும் பிணை வழங்கியுள்ளார். 

 இதனடிப்படையில் இருவரும் தலா 5 லட்சம் பெறுமதியான இரண்டு ஆட்பிணையில் செல்வதற்கு மன்று அனுமதி வழங்கியுள்ளதாக எதிர் தரப்பு சட்டத்தரணி சுகாஸ் ஊடகங்களிற்கு தெரிவித்தார். 

 கடந்த 03/06/2023 அன்று வடமராட்சி கிழக்கு தளையடி பொதுளையாட்டரங்கிலே கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கலந்து கொண்ட நிகழ்வு ஒன்றில் தம்மை உறுதிப்படுத்தாத நபர்கள் புகைப்படம் எடுத்தபோது அவர்கள் யார் என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் அவரது ஆய்வு உத்தியோகத்தர் ஆகியோர் வினவியபோது அவர்கள் தங்களுடைய அடையாளங்களை நிரூபிக்க தவறிய வேளையில் அவரை அடையாளத்தை நிரூபித்துவிட்டு செல்லுமாறு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பாராளுமன்ற உறுப்பினர் கேட்கப்பட்டபோது அவர் மீது தாக்குதல் நடத்தி தப்பிய சம்பவம் தொடர்பில் போலீசாரின் கடமைக்கு இடையூறு விளைவித்தார் என்ற குற்றச்சாட்டை முன்வைத்து கடந்த 05.06.2023 அன்று அதிகாலை மருதங்கேணி போலீசாரால் குறித்த பெண் கைது செய்யப்பட்டிருந்தார். 

அன்றைய தினம் மற்றுமொரு சந்தேக நபரான உதய சிவமும் கைது செய்யப்பட்டிருந்தார். குறித்த இருவரும் மன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

 குறித்த வழக்கை விசாரணைக்கு எடுத்தக்கொண்ட நீதவான் இருவரையும் 7ம் திகதி வரை தடுப்பு காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கியிருந்தார். இன்ந நிலையில் குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

 இதன்போது குறித்த இருவருக்கும் பிணை வழங்கப்பட்டது. குறித்த வழக்கு தொடர்பில் சட்டத்தரணி சுகாஸ் ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்தார்.

images/content-image/2023/06/1686119852.png

images/content-image/2023/06/1686119840.png

images/content-image/2023/06/1686119818.png

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4