நஞ்சுத்தன்மையான கடல்மீனை உண்டதால் பெண் ஒருவர் உயிரிழப்பு! மூவர் ஆபத்தான நிலையில்

#SriLanka #Batticaloa #Death
Mayoorikka
3 years ago
நஞ்சுத்தன்மையான கடல்மீனை உண்டதால் பெண் ஒருவர் உயிரிழப்பு! மூவர் ஆபத்தான நிலையில்

மட்டக்களப்பு – மாங்காடு பிரதேசத்தில் உணவு ஒவ்வாமையால் 27 வயது பெண் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் 3 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

 மாங்காடு பிரதேசத்தைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தாயாரான 27 வயதுடைய ஒருவரே உயிரிழந்தார்.

 குறித்த பெண் அவரது 4 மற்றும் 7 வயதான இரு குழந்தைகள் மற்றும் அவரது தாயார் ஆகிய 4 பேரும் மதிய உணவை உட்கொண்டதன் பின்னர் மயங்கியதையடுத்து களுவாஞ்சிக்குடி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர். 

 கடல் மீனினமான பேத்தை மீனை உட்கொண்டதன் காரணமாகவே இவ் அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

 இந்த நிலையில் 27 வயதுடைய பெண் உயிரிழந்துள்ளதுடன் எனைய 3 பேரும் தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

 இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4