முதுகெலும்பை நேராக நிமித்தி உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்தினால் பதில் கிடைக்கும் - எதிர்க்கட்சித் தலைவர்

#SriLanka #Sajith Premadasa #Lanka4
Kanimoli
3 years ago
முதுகெலும்பை நேராக நிமித்தி உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்தினால் பதில் கிடைக்கும் - எதிர்க்கட்சித் தலைவர்

மார்ச் 19 ஆம் திகதிக்குப் பின்னர்,உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம் முடிவடைவதைத் தொடர்ந்து பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரின் பிரதிநிதி ஒருவர்,இந்த நிறுவனங்களை ஒருங்கிணைப்புச் செய்ய நியமிக்குமாறு கோரி அரசாங்கம் வெளியிட்ட சுற்றறிக்கையை மாற்றிமைத்ததில் மகிழ்ச்சியடைந்தாலும், ஆளுநரின் ஒருங்கிணைப்பாளராக அரசாங்க அதிகாரியொருவர், அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவரை நியமிப்பது தொடர்பான சுற்றுநிரூபமொன்று வெளியிடப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

 இந்த அனைத்து அதிகாரங்களையும் சட்டத்தின் பிரகாரம் செயல்படுத்த மகாண ஆணையாளர்கள், உள்ளூராட்சி ஆணையர்கள், மாநகர ஆணையர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்கள் உள்ளதாகவும், 

இவற்றை நடைமுறைப்படுத்த புதியவர்கள் நியமிக்கப்பட வேண்டிய தேவை இல்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். முந்தைய சுற்றறிக்கையைப் போலவே, இந்த புதிய சுற்றறிக்கையும் நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தப்படும் எனவும், 

இதில் பின்வாங்கப்போவதில்லை எனவும், வெவ்வேறு சந்தர்ப்பங்களில் வெவ்வேறு சுற்றறிக்கைகளை முன்வைக்காமல் அச்சமோ கூச்சமோ இன்றி, முதுகெலும்பை நேராக நிமித்தி உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்தினால் இந்தக் கேள்விகளுக்கெல்லாம்

 மக்கள் ஆணை மூலம் பதில் கிடைக்கும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் பிரதமரிடம் இன்று (9) பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4