கைது செய்யப்பட்ட 7 பொலிஸ் உத்தியோகத்தர்களும் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க முடிவு

#SriLanka #Arrest #Police #Lanka4
Kanimoli
3 years ago
கைது செய்யப்பட்ட 7 பொலிஸ் உத்தியோகத்தர்களும் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க முடிவு

பொலிஸ் காவலில் இருந்த ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 7 பொலிஸ் உத்தியோகத்தர்களும் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

 குறித்த குழுவினர் இன்று மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் 7 அதிகாரிகளே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.

 நாரஹேன்பிட்டி தொழிற்பயிற்சி நிறுவனத்தில் பணியாற்றிய ஹிக்கடுவையைச் சேர்ந்த 41 வயதுடைய ஒருவர் பொலிஸ் காவலில் வைக்கப்பட்ட பின்னர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

 சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4