Test Final - இந்தியாவை விட 298 ஓட்டங்கள் முன்னிலையில் ஆஸ்திரேலிய அணி

#India #Australia #Test #Cricket
Prasu
3 years ago
Test Final - இந்தியாவை விட 298 ஓட்டங்கள் முன்னிலையில் ஆஸ்திரேலிய அணி

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 469 ரன்கள் குவித்தது. இந்தியா முதல் இன்னிங்சில் 296 ரன்கள் சேர்த்து ஆல் அவுட்டானது.

சிறப்பாக ஆடிய ரகானே 89 ரன்னில் அவுட்டானார். பொறுப்புடன் ஆடிய ஷர்துல் தாகூர் அரை சதமடித்த நிலையில் 51 ரன்னில் அவுட்டானார். இதன்மூலம் இந்திய அணி 173 ரன்கள் பின்தங்கியுள்ளது.

ஆஸ்திரேலிய சார்பில் பாட் கம்மின்ஸ் 3 விக்கெட்டும், மிட்செல் ஸ்டார்க், போலண்ட், கிரீன் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து, ஆஸ்திரேலியா அணி இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கியது. தொடக்க வீரர் டேவிட் வார்னர் ஒரு ரன்னில் அவுட்டாகினார். உஸ்மான் கவாஜா 13 ரன்னில் வெளியேறினார். அடுத்து லபுசேனுடன் ஸ்மித் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி ரன் குவிப்பில் ஈடுபட்டது. 

3வது விக்கெட்டுக்கு 62 ரன்கள் சேர்த்த நிலையில் ஸ்மித் 34 ரன்னில் வீழ்ந்தார். அடுத்ததாக களமிறங்கிய கேமரூன் கிரீன் 7 ரன்கள் எடுத்தார். லபுசேனே 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

ஆஸ்திரேலியா அணி தற்போது 4 விக்கெட்டுக்கு 123 ரன்கள் எடுத்து, 296 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது.

 இந்தியா சார்பில் சிராஜ், உமேஷ் யாதவ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும், ஜடேஜா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4