கொழும்பு-அவிசாவளையில் சீமெந்து லொறியும் பஸ்ஸும் நேருக்கு நேர் மோதி விபத்து: 30 பேர் வைத்தியசாலையில்

#SriLanka #Accident #Hospital #Bus #Lanka4 #sri lanka tamil news
Prathees
3 years ago
கொழும்பு-அவிசாவளையில் சீமெந்து லொறியும் பஸ்ஸும் நேருக்கு நேர் மோதி விபத்து:  30 பேர் வைத்தியசாலையில்

கொழும்பு – அவிசாவளை பழைய வீதியில் நேற்று (09) அதிகாலை 4 மணியளவில் சீமெந்து ஏற்றிச் சென்ற லொறியொன்று  பஸ்ஸுடன் மோதியதில் ஏற்பட்ட விபத்தில் 30 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹன்வெல்ல பொலிஸார் தெரிவித்தனர்.

 காயமடைந்தவர்களில் லங்காம பஸ் சாரதியும் லொறி சாரதியும் அடங்குவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

காயமடைந்தவர்கள் ஹோமாகம மற்றும் நவகமுவ வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 கொழும்பில் இருந்து அவிசாவளை நோக்கிச் சென்ற லொறியொன்றும் அக்கரைப்பற்றில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற  பேரூந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

 ஹங்வெல்ல பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதி இன்ஸ்பெக்டர் ஜே. எச்.  வசந்தகுமாரவின் பணிப்புரையின் பேரில் அதிகாரிகள் குழுவொன்று மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4