தாபா ஸ்டைல் சென்னா மசாலா மிக சுவையாக செய்வது எப்படி

#Tamil People #Recipe #Cooking
Mani
10 months ago
தாபா ஸ்டைல் சென்னா மசாலா மிக சுவையாக செய்வது எப்படி
தேவையான பொருட்கள்:

1 கப் கருப்பு சுண்டல்

1 பெரிய

2 தக்காளி

2 டீஸ்பூன் இஞ்சி

1/4 டீஸ்பூன் மஞ்சள்

1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்

1 டீஸ்பூன் மல்லி

1/2 டீஸ்பூன் கரம்

1/2 டீஸ்பூன் சீரகத்தூள்

1 மல்லி

1/2 மஆம்சூர் பவுடர்

1/2 டீஸ்பூன் பெருங்காயம் தூள்

1/2 கப் நறுக்கிய கொத்தமல்லி இலை

2 மிளகாய்

1 ஸ்பூன் நெய்

1/2 டீஸ்பூன் கஸ்தூரி மேத்தி

செய்முறை:

முதலில் தக்காளி அரைத்து விழுதாக்கிக் கொள்ளவும். சுண்டலை 8மணி நேரம் ஊற வைத்து பின் குக்கரில் சுண்டல் மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு 5 விசில் விட்டு தண்ணீர் வைத்து எடுத்துக் கொள்ளவும்.

ஒரு கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பிரியாணி இலை, கிராம்பு, பட்டை, அண்ணாச்சி பூ, ஏலக்காய், சீரகம் தாளித்து நறுக்கிய வெங்காயம் மற்றும் உப்பு சேர்த்து நறுக்கிய

வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பின் கொடுத்துள்ள மசாலா பொருட்கள், பெருங்காயத்தூள் அனைத்தையும் சேர்த்து வதக்கவும் பின் தக்காளி அரைத்த விழுது சேர்த்து பின் பிரிந்து வரும் வரை நன்கு வதக்கவும்.

பின்னர் வேக வைத்த சுண்டல் 1/4கப் எடுத்து மிக்ஸியில் அரைத்து கடாயில் சேர்த்து கலந்து விடவும். இதனுடன் மீதி உள்ள சுண்டல் வேக வைத்து தண்ணீரோடு சேர்த்து கலந்து விடவும்.

இந்த மசாலா கறி நன்றாக தேவையான பதம் வந்ததும், மல்லித்தழை, மிளகாய், கஸ்தூரி மேத்தி சேர்த்து கலந்து, கடைசியாக நெய் விட்டு மேலும் ஒரு கொதி நெய் இறக்கவும்.

அவ்வளவுதான். சுவையான தாபா ஸ்டைல் கடலை கறி ரெடி. இது சப்பாத்தி, நாண், பூரி எல்லாவற்றிற்கும் மிகப் பொருத்தமாக இருக்கும்.