எனது கண் பார்வையிழக்கும் முன் மகனை பார்க்க வேண்டும்: சாந்தனின் தாயார் மோடிக்கு உருக்கமான வேண்டுகோள்

#SriLanka #D K Modi
Mayoorikka
3 years ago
எனது கண் பார்வையிழக்கும்  முன் மகனை பார்க்க வேண்டும்: சாந்தனின் தாயார் மோடிக்கு உருக்கமான வேண்டுகோள்

எனது மற்றைய கண்ணும் பார்வையிழந்து போகுமுன் என் மகனை நான் பார்க்க வேண்டும், என்னால் முழுமையாக இயலாமல்ப் போகும் முன் என் பிள்ளைக்கு நான் சமைத்துக் கொடுத்து பிள்ளை சாப்பிடுவதை நான் காண வேண்டும் என சாந்தனுடைய தாயார் நரேந்திர மோடிக்கு உருக்கமான வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.

 இந்திய நாட்டின் பிரதமர் எனக்கும் பிள்ளை தான் என்னை தாயாக அவர் எண்ணி எனது மகன் சாந்தனை நாட்டுக்கு அனுப்பும் நடவடிக்கையை உடன் எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க ஊடகங்கள் வாயிலாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 32 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்து வந்த சாந்தன் உள்ளிட்டவர்களுக்கு கடந்த 2022:10: 22 அன்று விடுதலை அறிவித்தது இந்திய நீதிமன்றம்.

 ஆனாலும் அவர் இன்று வரை திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் தடுப்புக் காவலிலேயே வைக்கப்பட்டுள்ளார். 

இந் நிலையில் சாந்தன் தன்னை தனது சொந்த நாடான இலங்கைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும், எனது இறுதிக் காலத்தை எனது அம்மாவுடன் கழிக்க விரும்புகிறேன் எனக் கோரி பிரதமர் நரேந்திர மோதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

 இந்த நிலையிலேயே சாந்தன் அவர்களது தாயாரும் தனது மகனை தாயகத்திற்கு அனுப்பி வைக்குமாறு உருக்கமான வேண்டுகோள் ஒன்றை பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று விடுத்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4