கிராமத்து பூண்டு கார குழம்பு இப்படி செய்து பாருங்க!
தேவையான பொருட்கள்:
1 கப் சின்ன வெங்காயம்
1/2 கப் பூண்டு
2 டீஸ்பூன் கல் உப்பு
1 டீஸ்பூன் சாம்பார் தூள்
2 மிளகாய் வற்றல்
1/2 டீஸ்பூன் கடுகு
1 டீஸ்பூன் கடலை
1/2 டீஸ்பூன் வெந்தயம்
1/2 கடுகு 1 பெருங்காயம் தூள்
3 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய்
1 டீஸ்பூன் மஞ்சள்
புளி எலுமிச்சை
கறிவேப்பிலை சிறிதளவு
செய்முறை:
பின்னர் ஒரு மண் சட்டியில் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு சேர்த்து வெடித்ததும் கடலைப்பருப்பு, வெந்தயம், மிளகாய்வற்றல் சேர்த்து தாளிக்கவும்.
பிறகு வெங்காயம், பூண்டு, கருவேப்பிலை, பெருங்காயத்தூள் இவற்றையும் சேர்த்து நன்கு வதக்கவும்.
பின் பூண்டு வெங்காயம் வதங்கியவுடன் மஞ்சள் தூள், சாம்பார்தூள், கல்லுப்பு சேர்த்து பச்சை வாசனைபோகும் வரை வதக்கி புளியை கரைத்து ஊற்றவும்.
இப்பொழுது குழம்பு நன்கு கொதித்து வற்ற ஆரம்பிக்கும் போழுது குழம்பை இறக்கி வைக்கவும்.
அவ்வளவுதான் அருமையான கிராமத்து சுவையில் பூண்டு கார குழம்பு ரெடி. இந்த காரகுழம்பு சாதம் அல்லது இட்லி மற்றும் தோசையுடன் கூட சுவையாக இருக்கும்.