நாட்டில் உள்ள சிறைச்சாலைகளில் அதிக நெரிசல் நிலை!

#SriLanka #Prison
Mayoorikka
3 years ago
நாட்டில் உள்ள சிறைச்சாலைகளில் அதிக நெரிசல் நிலை!

நாட்டிலுள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் 11,762 கைதிகள் மட்டுமே அடைக்கப்படக்கூடிய சிறைச்சாலைகளில் தற்போது 26,791 கைதிகள் உள்ள நிலையில், சிறைச்சாலைகளில் நெரிசல் 259 வீதமாக அதிகரித்துள்ளதாக நாடாளுமன்றக் குழு தெரிவித்துள்ளது.

 சில சிறைகளில் நெரிசல் 300 முதல் 400 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக சமீபத்தில் நாடாளுமன்ற வளாகத்தில் கூடிய பொதுக் கணக்குக் குழுவில் (கோபா) தெரியவந்துள்ளது.

 அனைத்து சிறைச்சாலைகளிலும் 11,762 கைதிகளை மட்டுமே அடைக்க முடியும் என்ற போதிலும், 26,791 கைதிகள் சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சின் செயலாளர் வசந்த பெரேரா தெரிவித்துள்ளார் .

 சிறைச்சாலைகள் ஆணையாளர் துஷார உபுல்தெனிய, 17,502 கைதிகள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

 9,289 பேர் தண்டனைக் கைதிகளாக உள்ளனர். 1,309 கைதிகள் நீதிமன்றங்கள் விதித்த அபராதத் தொகையைச் செலுத்த முடியாமல் சிறைகளில் வாடுவதும் தெரியவந்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4