யாழ்ப்பாண பாதுகாப்பு படைத் தலைமையக புதிய தளபதியாக மேஜர் ஜெனரல் எஸ்.ஆர்.கே. ஹெட்டியாராச்சி பதவியேற்பு!

#SriLanka
PriyaRam
3 years ago
யாழ்ப்பாண பாதுகாப்பு படைத் தலைமையக புதிய தளபதியாக மேஜர் ஜெனரல் எஸ்.ஆர்.கே. ஹெட்டியாராச்சி பதவியேற்பு!

யாழ்ப்பாண பாதுகாப்பு படைத் தலைமையக புதிய தளபதியாக மேஜர் ஜெனரல் எஸ்.ஆர்.கே. ஹெட்டியாராச்சி கடந்த திங்கட்கிழமை (12) மத அனுஷ்டானங்கள் மற்றும் இராணுவ சம்பிரதாயங்களுக்கு மத்தியில் பதவியேற்றார்.

யாழ்ப்பாணம் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் நுழைவாயிலில், இலங்கை காலாட் படையணியினரால் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை மற்றும் அணிவகுப்பு மரியாதை அவருக்கு வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, சிரேஸ்ட அதிகாரிகள் முன்னிலையில் மகா சங்கத்தினர்களின் 'பிரித்' பாராயணங்களுக்கு மத்தியில், அவர் தனது புதிய பதவியை ஏற்றுக்கொண்டதைக் குறிக்கும் அதிகாரபூர்வ ஆவணத்தில் கையொப்பமிட்டார்.

நிகழ்வில் மாங்கன்று நடுதல், குழு படம் எடுத்தல் என்பவற்றிலும் அவர் கலந்து கொண்டார். அதன் பின்னர், மேஜர் ஜெனரல் எஸ்.ஆர்.கே. ஹெட்டியாராச்சி பலாலி போர்வீரர்கள் நினைவுத்தூபியில் வீரமரணம் அடைந்த போர்வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.

பதவியேற்பு நிகழ்வில் 51, 52 மற்றும் 55 ஆவது காலாட் படைப்பிரிவுகளின் தளபதிகள், பிரிகேட் தளபதிகள், சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர். நிகழ்வில் இந்து, கத்தோலிக்க மற்றும் இஸ்லாமிய மத தலைவர்களும் கலந்துகொண்டனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4