கண்டி – மெனிக்ஹின்ன பகுதியில் வெடிப்புச் சம்பவம்; ஒருவர் உயிரிழப்பு!

PriyaRam
3 years ago
கண்டி – மெனிக்ஹின்ன பகுதியில் வெடிப்புச் சம்பவம்; ஒருவர் உயிரிழப்பு!

கண்டி – மெனிக்ஹின்ன பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் மெனிக்ஹின்ன, கல்கடுவ பகுதியைச் சேர்ந்த 36 வயதான முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

வயல் நிலம் ஒன்றில் இந்த வெடிப்புச் சம்பவம் நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வெடிப்பிற்காக பயன்படுத்தப்படும் உபகரணம் ஒன்றை பயன்படுத்தி, குறித்த நபர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிடுகின்றனர்.

 இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4