மதுபான தன்சல் நடாத்தி டிக்டொக் செயலியில் பதிவிட்ட 6 இளைஞர்கள் கைது

#SriLanka #Arrest #Alcohol #TikTok
Prasu
3 years ago
மதுபான தன்சல் நடாத்தி டிக்டொக் செயலியில் பதிவிட்ட 6 இளைஞர்கள் கைது

பொசன் போயா தினத்தன்று மதுபான தன்சல் நடாத்திய காணொளியை டிக்டொக் செயலியில் பதிவிட்ட 6 இளைஞர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

இவர்கள் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புகையிலை மற்றும் மதுவை விளம்பரப்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த காணொளி சமூக ஊடகங்களில் பரவியதை அடுத்து, பொலிஸ் மா அதிபர் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் விசாரணைகளை ஒப்படைத்துள்ளனர். அதற்கமைய கட்டுநாயக்கவில் வசிக்கும் 20 வயதுக்கும் 25 வயதுக்கும் இடைப்பட்ட 6 இளைஞர்கள் குறித்த பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

அத்தோடு சம்பவம் தொடர்பில் விரிவான வாக்குமூலங்களைப் பதிவு செய்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அங்கு தங்கள் உறவினர் கொண்டு வந்த வெளிநாட்டு மதுபான போத்தல்களில் தேனீரை ஊற்றி டிக்டொக் செயலிக்கு வீடியோ எடுப்பதற்காக இவ்வாறான செயலை செய்ததாக தெரிவித்துள்ளனர்.

 எவ்வாறாயினும் புகையிலை மற்றும் மதுபான சட்டத்தின் கீழ் மதுபானத்தை விளம்பரப்படுத்திய குற்றச்சாட்டில் சந்தேகநபர்கள் 6 பேரையும் கைது செய்த புலனாய்வு அதிகாரிகள் அவர்களை கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4