மெதிரிகிரியவில் துப்பாக்கி சூடு: பெண்ணொருவர் உயிரிழப்பு

#SriLanka #Police #Crime #GunShoot
Prathees
3 years ago
மெதிரிகிரியவில்  துப்பாக்கி சூடு: பெண்ணொருவர் உயிரிழப்பு

மெதிரிகிரிய பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மிரிசேன மீனவ கிராமத்தில் வசிக்கும் 36 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

 தாய் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்த போது, ​​அவரது தாய் வீட்டின் முன் மறைந்திருந்த நபர் ஒருவர், குறித்த பெண்ணை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

 துப்பாக்கிச் சூட்டு தாக்குதலில் படுகாயமடைந்த பெண் மெதிரிகிரிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

 பிரிந்து சென்ற கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர்.

 துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபர் தப்பிச் சென்றுள்ளதுடன், அவரை கைது செய்வதற்கான விசாரணைகளை மெதிரிரிகிரிய பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4