ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவன் சடலமாக மீட்பு

PriyaRam
3 years ago
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவன் சடலமாக மீட்பு

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மஹரகம, கடுவல பிரதேசத்தில் பல்கலைக்கழகத்தினால் நடாத்தப்படும் மாணவர் விடுதியின் கீழ் தளத்தில் அவர் சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

யாழ்ப்பாணம் - ஊர்காவற்துறை பகுதியைச் சேர்ந்த 23 வயதான மாணவா் ஒருவரே இவ்வாறு மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, மாணவனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்து, உயிரிழந்த மாணவனின் உறவினர்கள் நீதிவான் விசாரணையை கோரியுள்ளனர். 

சம்பவம் தொடர்பில் மஹரகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். விடுதியில் ஏறக்குறைய 64 மாணவர்கள் தங்கி இருப்பது தெரியவந்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4