இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர் பிரனாய் அரையிறுதிக்கு முன்னேற்றம்

#India #sports #Sports News
Mani
3 years ago
இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர் பிரனாய் அரையிறுதிக்கு முன்னேற்றம்

இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டி தலைநகர் ஜகார்த்தாவில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதிச் சுற்றில், இந்தியாவைச் சேர்ந்த எச்.எஸ்.பிரனாய், ஜப்பானைச் சேர்ந்த நரகோடாவை எதிர்த்து பலப்பரீட்சை நடத்தினார்.

இந்த பரபரப்பான ஆட்டத்தில் அவர் 21-18 மற்றும் 21-16 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்றார், இதனால் அவர் அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.

 இந்தியாவின் ஸ்ரீகாந்த் மற்றும் சீனாவின் லி ஷி பெங் இடையேயான கால் இறுதி ஆட்டத்தில் ஸ்ரீகாந்த் 14-21, 21-14, 12-21 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4