தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்பு

PriyaRam
3 years ago
தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்பு

நாட்டின் இன்றைய பொதுவான வானிலை முன்னறிவிப்பு - தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்பு பிரிவினரால் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, சப்ரகமுவ மாகாணத்திலும், கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மாகாணத்திலும். காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் ஓரளவு மழை பெய்யக்கூடும். வட மாகாணத்திலும், திருகோணமலை மாவட்டத்திலும், பிற்பகலில் அல்லது இரவில் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன்கூடிய மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், பொலன்னறுவை மாவட்டத்திலும் காலை வேளையில் மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. 

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், வட மத்திய மாகாணத்திலும், புத்தளம், ஹம்பாந்தோட்டை, மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40 – 45 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

 இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புக்களை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4