பன்னீர் ஜிலேபி இப்படி செய்து பாருங்க!
தேவையான பொருட்கள்:
150 கிராம் பன்னீர்
1/2 கப் சர்க்கரை
1 சிட்டிகை கேசரி பவுடர்
4 டீஸ்பூன் மைதா
1/4 டீஸ்பூன் பேக்கிங்
2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
2 ஏலக்காய்
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் அரை கப் சர்க்கரை கால் கப் தண்ணீர் சேர்த்து பாகு தயாரித்து கொள்ளவும்.
பாகு கெட்டியாக கம்பி பதம் வந்த பிறகு சிறிதளவு கேசரி பவுடர் அல்லது குங்குமப்பூ சேர்த்துக் கொள்ளவும். அத்துடன் ஏலக்காய் 2 சேர்த்துக் கொள்ளவும்.
ஒரு மிக்ஸி ஜாரில் பன்னீரை சேர்த்து அரைத்துக் கொள்ளவும். அத்துடன் 4 ஸ்பூன் மைதா, பேக்கிங் சோடா, சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடான பின் ஜிலேபி பிழிந்து எடுக்கவும்.
மெதுவான தீயில் ஜிலேபி பிழியவும் அல்லது அதன் வடிவம் உடைந்துவிடும்.
ஜிலேபி நன்கு வெந்தவுடன் பொன் நிறமாக மாறிய உடன். செய்து வைத்திருந்த சர்க்கரை பாகில் சேர்த்துக் கொள்ளவும். 10 நிமிடம் ஊறவைகத்து பின்பு பறிமாறலாம்.
இப்போது சுவையான மிகவும் எளிய முறையில் பன்னீர் ஜிலேபி தயார்.