பிரான்சில் ஏற்பட்ட விமான விபத்தில் 2 ராணுவ வீரர்கள் உள்பட 3 பேர் உயிரிழப்பு

#Death #France #Crash #AirCraft
Prasu
3 years ago
பிரான்சில் ஏற்பட்ட விமான விபத்தில் 2 ராணுவ வீரர்கள் உள்பட 3 பேர் உயிரிழப்பு

பிரான்ஸ் நாட்டின் மலைப்பிரதேசமான வேர் பிராந்தியத்தில் உள்ள கோன்பரோன் கிராமத்தில் நேற்று இலகுரக விமானம் விழுந்து நொறுங்கியது. இதுபற்றி தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விமானம் விழுந்த பகுதியை தேடினர். 

ஹெலிகாப்டர்களின் உதவியுடன் விபத்துக்குள்ளான விமானத்தை கண்டுபிடித்த, தீயணைப்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். விமானத்தில் பயணித்த இரண்டு ராணுவ வீரர்கள் உள்பட 3 பேர் பலியாகினர். 

இரண்டு ராணுவ வீரர்களும் அருகில் உள்ள ஹெலிகாப்டர் படைப்பிரிவு பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றுவந்த வீரர்கள் என ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

விமான விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4