அசாமில் வெள்ளம்: 108 கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின; லட்சக்கணக்கான மக்கள் அவதிப்படுகின்றனர்!

#India #people #Rain #Flood #HeavyRain #Tamilnews #Breakingnews
Mani
1 year ago
அசாமில் வெள்ளம்: 108 கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின; லட்சக்கணக்கான மக்கள் அவதிப்படுகின்றனர்!

கடந்த சில நாட்களாக, அசாம் மற்றும் அதனையொட்டி உள்ள நாடான பூடான் இடைவிடாத கனமழை பெய்து வருகிறது. இதனால், பக்லாடியா ஆற்றில் அபாய அளவை கடந்து வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் புதிய பகுதிகளில் வெள்ள நீர் புகுந்துள்ளது.

அசாமில் உள்ள நல்பாரி மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், 310 ஹெக்டேர் நிலம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. வெள்ளத்தால் 2 தடுப்பணைகள், 15 சாலைகள், 2 பாலங்கள், கால்வாய்கள் மற்றும் பிற கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளன.

நல்பாரி மாவட்டத்தில் மட்டும் மொத்தம் 44,707 நபர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், தற்போது 108 கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன. மேலும், பக்சா (26,571), லகீம்பூர் (25,096), தமுல்பூர் (15,610), மற்றும் பார்பேட்டா (3,840) மாவட்டங்களில் வசிப்பவர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில், 1.07 லட்சம் கால்நடைகள் மற்றும் கோழிப் பண்ணைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!