பல்கலைக்கழக அனுமதி பெறும் மாணவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து கடனை வழங்கவும் - சஜித்

#SriLanka #Parliament #Sajith Premadasa #Lanka4 #University
Kanimoli
3 years ago
பல்கலைக்கழக அனுமதி பெறும் மாணவர்களுக்கு  முன்னுரிமை கொடுத்து கடனை வழங்கவும் - சஜித்

நல்லாட்சி அரசாங்கத்தினால் பல்கலைக்கழக அனுமதி பெறும் மாணவர்களுக்கு மேலதிக கல்விக்காக வட்டியில்லா கடன்களை வழங்கிய போதிலும் 2021/2022 ஆம் வருட தொகுதி மாணவர்களுக்கு கடன் வழங்குவதற்குத் தேவையான வர்த்தமானி வெளியிடப்படவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (23) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். 2

017 ஆம் ஆண்டு, பட்டதாரி கற்கைகளை வழங்கும் ஆறு கல்வி நிறுவனங்களுக்கு, 26 கற்கைகளுக்காக 8 இலட்சம் ரூபா வட்டியில்லா கடன் வழங்கப்பட்டதாகவும், ஆனால் 2021/202 தொகுதி மாணவர்களுக்கு இந்தக் கடன் இன்னும் வழங்கப்படவில்லை என்றும், இதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கூட கிடைத்துள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

 அமைச்சரவையின் அங்கீகாரம் கூட கிடைக்கப்பெற்றிருக்கும் இவ்வேளையில் இது நடைமுறைப்படுத்தப்படாமை பிரச்சினையாகும் என்றும், விதிமுறைகளை தற்போது ஏற்படுத்ததாது, 7ஆம் தொகுதிக்கு முன்னுரிமை கொடுத்து கடனை வழங்க வழங்குமாறும் எதிர்க்கட்சித் தலைவர் வேண்டுகோள் விடுத்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4