எம்பிலிப்பிட்டியவில் இன்று அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் பலி

#SriLanka #Police #GunShoot
Prathees
3 years ago
எம்பிலிப்பிட்டியவில் இன்று அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் பலி

எம்பிலிபிட்டிய பனாமுர வெலிக்கடைய பிரதேசத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சந்தேக நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

 பல துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய இவரைக் கைது செய்வதற்காக இன்று (24) அதிகாலை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது, ​​பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.

 விசேட அதிரடிப்படை அதிகாரிகள் பதில் தாக்குதல் நடத்தியதை அடுத்து சந்தேக நபர் சுட்டுக்கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 22 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார். அவர் முன்னாள் ராணுவ வீரர் என பொலிசார் தெரிவித்தனர்.

 சந்தேக நபர் மினுவாங்கொடை, பஸ்டியன் மாவத்தை பிரதேசத்தில் அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு மற்றும் அம்பலாங்கொடையில் பிரதி அதிபர் ஒருவரை சுட்டுக் கொன்ற சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை எம்பிலிபிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4