தித்திக்கும் சுவையான பாசந்தி இப்படி செய்து பாருங்க!
தேவையான பொருட்கள்:
1 lit கொழுப்பு நிறைந்த பால்
1/ Lit க்ரீம் மில்க்
3 tbsp சர்க்கரை
1 tbsp நறுக்கிய முந்திரி பருப்பு
1 tbsp ஏலக்காய் பொடி
¼ Cup பிஸ்தா
¼ tbsp பாதாம்
1 tsp குங்குமப்பூ
செய்முறை:
பாசந்தி ஸ்வீட் செய்ய முதலில் நல்ல கனமான அடியுள்ள பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் பாலை ஊற்ற வேண்டும்.
பால் நன்றாக கொதிக்கும் வரை சூடுபடுத்தி அடிப்பகுதியில் பிடிக்காத வண்ணம் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.
பால் பாதியளவு ஆகும் வரை சுண்டக் காய்ச்ச வேண்டும் இப்பொழுது சர்க்கரையை சேர்த்து 2-3 நிமிடங்கள் நன்றாக கிளறி விடவும் இத்துடன் குங்குமப் பூ சேர்த்து விடவும் அழகான சுவையான கலர் கிடைக்கும்.
பால் நன்கு கெட்டியானதும், அதனை இறக்கி, அதில் ஏலக்காய் பொடி, நறுக்கிய பாதாம், முந்திரி, பிஸ்தா, குங்குமப்பூ சேர்த்து நன்கு கிளறி, ஒரு பாத்திரத்தில் ஊற்றி நன்கு குளிர வைத்து எடுத்தால் பாசந்தி ரெடி.