இன்று மாலை வரை கடும் மழை மற்றும் பலத்த காற்று அமுலில் இருக்கும் என எச்சரிக்கை

#SriLanka #weather #Rain #Lanka4
Kanimoli
2 years ago
இன்று மாலை  வரை கடும் மழை மற்றும் பலத்த காற்று அமுலில் இருக்கும் என எச்சரிக்கை

இன்று (26) மாலை 5.30 மணி வரை கடும் மழை மற்றும் பலத்த காற்று அமுலில் இருக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்யக்கூடும்.

 அப்பிரதேசங்களில் சில இடங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதேவேளை, இன்று காலை வெளியிடப்பட்ட வானிலை அறிக்கையின்படி, வடமேல் மாகாணத்தில் பல காலப்பகுதிகளில் மழை பெய்யக்கூடும்.

 ஊவா மாகாணம் மற்றும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் மாலை அல்லது இரவில் ஒரு சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளில், மேல் மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், புத்தளம், காலி, ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-45 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசும்.

 இடியுடன் கூடிய மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4