லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையில் மாற்றம்!

#SriLanka #prices #Litro Gas
Mayoorikka
2 years ago
லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையில் மாற்றம்!

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை யை குறிக்கவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

 இதற்கமைய எதிர்வரும் ஜுலை மாதம் முதல் பகுதியில் விலை குறைப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இதனை லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார். முன்னதாக கடந்த ஜுன் மாதம் 04 ஆம் திகதி சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டது.

 இதற்கமைய 12.5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு 452 ரூபாவால் குறைக்கப்பட்டு 3186 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது.

 5 கிலோகிராம் நிறைகொண்ட லிட்ரோ சமையல் எரிவாயு 181 ரூபாவால் குறைக்கப்பட்டு 1281 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது.

 அத்துடன் 2.5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு 83 ரூபாவால் குறைக்கப்பட்டு 598 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4