முறுக்கு வகை பூண்டு காராசேவு செய்வது எப்படி

#Tamil People #Recipe #Cooking #Tamilnews #How_to_make
Mani
10 months ago
முறுக்கு வகை பூண்டு காராசேவு செய்வது எப்படி

தேவையான பொருட்கள்:

12 பூண்டு

2 கப் கடலை மாவு

1 கப் அரிசி மாவு

1 டேபிள் ஸ்பூன் தனி மிளகாய் தூள்

11/2 கப் எண்ணெய்

1/2 டீஸ்பூன் உப்பு


செய்முறை:

  • முதலில் கடலை மாவு, அரிசி மாவு, பொட்டுக்கடலை மாவு மூன்றையும் சலித்து எடுத்துக் கொள்ளவும். பூண்டை தோல் உரித்து எடுத்துக் கொள்ளவும்.மற்ற தேவையான அனைத்து பொருட்களையும் தயாராக எடுத்துக் கொள்ளவும்.
  • அடுத்து மிக்ஸியில் பூண்டு பற்கள், மிளகாய் தூள், உப்பு மூன்றையும் ஒன்றாக போட்டு விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
  • பின்பு ஒரு பாத்திரத்தில் சலித்த கடலை மாவு, அரிசி மாவு, பொட்டுகடலை மாவு ஆகியவற்றை போட்டு அதனுடன் அரைத்த விழுதை போடவும். அதில் அரை கப் தண்ணீரை சிறிது சிறிதாக தெளித்து மிருதுவாக சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்துக் கொள்ளவும்.
  • பிசைந்த பிறகு கையில் ஒட்டாமல் இருக்க வேண்டும். மாவை பிசைந்த பிறகு காரசேவு கரண்டியில், ஒரு முறை தேய்த்து பார்க்கவும்.
  • அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதிலிருந்து ஒரு மேசைக்கரண்டி அளவு எண்ணெயை எடுத்து பிசைந்து வைத்திருக்கும் மாவுடன் ஊற்றி ஒரு முறை நன்கு பிசைந்துக் கொள்ளவும்.
  • எண்ணெய் காய்ந்ததும் காரசேவு கரண்டியை எண்ணெயின் மேல் புறம் பிடித்து கொண்டு அதில் மாவை வைத்து உள்ளங்கைகளால் அலுத்தி தேய்த்து விடவும்.
  • கம்பி போல் விழ வேண்டும். பின்னர் 2 நிமிடம் கழித்து திருப்பி போட்டு எண்ணெய் சத்தம் அடங்கி, பொன்னிறமாக ஆனதும் எடுத்து விடவும்.
  • பிறகு கார சேவை எண்ணெய்யிலிருந்து எடுத்து ஒரு பாத்திரத்தை வைத்து அதன் மேல் எண்ணெய் வடிகட்டியை வைத்து அதில் போடவும். எண்ணெய் வடிந்ததும் எடுத்து விடவும்.