கிளிநொச்சியில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் படுகாயம்

#SriLanka #Kilinochchi #Crime #GunShoot
Mayoorikka
2 years ago
கிளிநொச்சியில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் படுகாயம்

கிளிநொச்சியில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 38 வயதுடைய நபர் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 கிளிநொச்சி - உதயநகர் பகுதியிலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. காரில் பயணித்தவர்கள் மீது மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரால் இன்று அதிகாலை துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 இதன்போது காயமடைந்த காரின் சாரதி கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த சம்பவம் நடந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் போது பாதிக்கப்பட்ட நபர் மேலும் இருவருடன் காரில் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 சம்பவத்தை தொடர்ந்து சந்தேகநபர்கள் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4