விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் இஸ்ரேல் மீதும் போர்க்குற்ற விசாரணை!

#SriLanka #UN #Israel #War
Mayoorikka
2 years ago
விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் இஸ்ரேல் மீதும் போர்க்குற்ற விசாரணை!

இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்து 14 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்னும் நீதி வழங்கப்படவில்லை என சர்வதேச ஊடகமான அல் ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது.

 ஐக்கிய நாடுகள் சபையும் மனித உரிமை அமைப்புகளும் போரின் போது நடந்த போர்க்குற்றங்களை சிரத்தையுடன் ஆவணப்படுத்தியுள்ளன. 

 இந்த நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான உள்நாடுப் போரில் இலங்கை அரசாங்கத்திற்கு ஆதரவாக போர்க்குற்றத்திற்கு உடந்தையாக இருந்த குற்றச் சாட்டில் இஸ்ரேலுக்கு எதிராகவும் விசாரணைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என வலியுறுத்தபப்ட்டுள்ளது.

 இஸ்ரேலின் மனித உரிமைகள் அமைப்புகளைச் சேர்ந்த யெஸ் ஜிவல் (Yesh gvul), மற்றும் டொரட் செடெக் (terat zedec), மனித உரிமைகள் சட்டத்தரணி ஈடேய் மெக் ஆகியோரே இந்த கோரிக்கையை விடுத்துள்ளதாக அல் ஜசீரா தெரிவித்துள்ளது.

 ஐக்கிய நாடுகள் சபையும், மனித உரிமை அமைப்புகளும் போரின் போது நடந்த போர்க்குற்றங்களை ஆவணப்படுத்தியுள்ளன. அத்துடன் தாமும் திரட்டிய ஆதாரங்களின் அடிப்படையில் குறித்த ஆர்வலர்கள் இந்த வலியுறுத்தலை முன்வைத்துள்ளனர்.

 போரின்போது, பொதுமக்களுக்கு எதிராக இழைத்த போர்க்குற்றங்களுக்கு உடந்தையாக இருந்த இலங்கை அரசாங்கத்தின் சர்வதேச ஆதரவு நாடுகளில் இஸ்ரேலும் ஒன்றென கண்டறியப்பட்டுள்ளது.  

இஸ்ரேலின் இராணுவ தொழில்நுட்பத்தை கணிசமான அளவில் கொள்வனவு செய்து, ஆசியாவில் இஸ்ரேலின் மிக முக்கியமான வாடிக்கையாளர்களில் ஒருவராக இலங்கையும் மாறியது.

 அத்துடன், போரில் ஈடுபட்ட இலங்கைப் படையினருக்கும் இஸ்ரேல் பயிற்சியும் அளித்துள்ளது. இஸ்ரேலில் தயாரிக்கப்பட்ட கபிர் விமானங்கள் உள்நாட்டுப் போரில் முக்கிய பங்கு வகித்துள்ளன.

 இஸ்ரேலிய ஆயுதங்களும் இராணுவ உபகரணங்களும் இந்தப்போரில் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்பதை குறித்த ஆதாரங்கள் வெளிப்படுத்துகின்றன.

 இந்தநிலையில், போர்க் குற்றங்களில் இஸ்ரேலின் தொடர்பை வெளிப்படுத்தவும், வழக்குத் தொடரவும் தாம் விரும்புவதாக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

 எனினும் இலங்கைக்கு எதிராக போர்குற்ற விசாரணைகள் கோரப்படுகின்ற போதிலும் இஸ்ரேல் மற்றும் பிற நாடுகளில் இருந்து அவர்களுக்கு மறைமுகமாக உதவியவர்கள் மீது வழக்குத் தொடரப்படவில்லை என்று சுட்டிக்காட்டியுள்ளனர்.

 போருக்குப் பின்னர் இஸ்ரேலுக்கான தூதுவராக நியமிக்கப்பட்ட இலங்கையின் முன்னாள் தலைமை அதிகாரி டொனால்ட் பெரேராவும் போரில் இஸ்ரேல் உதவியதை உறுதிப்படுத்தியுள்ளதாக அல் ஜசீரா குறிப்பிட்டுள்ளது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4