அறையில் கட்டப்பட்டிருந்த தொட்டிலில் சிக்குண்டு சிறுவன் உயிரிழப்பு!

#SriLanka #Death #Police
Mayoorikka
2 years ago
அறையில் கட்டப்பட்டிருந்த தொட்டிலில் சிக்குண்டு சிறுவன் உயிரிழப்பு!

நாவலப்பிட்டியில் வீடொன்றின் அறையில் கட்டபட்டிருந்த தொட்டிலில் சிக்குண்டு சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 இந்த சம்பவம் நேற்று (27) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 புடவையால் கட்டப்பட்டிருந்த தொட்டிலில் கழுத்து சிக்குண்டு 9 வயது வயதான சிறுவனே உயிரிழந்தார்.

 வீட்டில் இருந்த மற்றுமொரு சிறு குழந்தைக்கு கட்டப்பட்டிருந்த தொட்டிலில் விளையாடிக் கொண்டிருந்த போதே குறித்த சிறுவன் இவ்வாறு உயிரிழந்ததாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

 சடலம் பிரேத பரிசோதனைக்காக தற்போது நாவலப்பிட்டி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.​

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4