லங்கா சதொச நிறுவனத்தில் நஷ்டம் ஏறத்தாழ 600 மில்லியன் தெரிவிப்பு

#SriLanka #rice #Sathosa #Lanka4
Kanimoli
2 years ago
லங்கா சதொச நிறுவனத்தில் நஷ்டம் ஏறத்தாழ 600 மில்லியன் தெரிவிப்பு

பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் பண்டார தலைமையில் கூடிய அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவில் (கோப் குழு) லங்கா சதொச லிமிடட் நிறுவனம் அழைக்கப்பட்டது. இதில் நிறுவனத்தின் 2019 மற்றும் 2020 ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் தற்போதைய செயலாற்றுகை குறித்த விடயங்கள் ஆராயப்பட்டது.

 2028 வரையான காலப்பகுதிக்கு விரிவான திட்டத்தைத் தயாரிக்க அறிவுறுத்தல் 2021-24 காலப் பகுதிக்கு உறுதியான திட்டம் இருந்தபோதும் அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டிருக்கவில்லை. இதனால், 2028ம் ஆண்டு வரை விரிவான திட்டத்தை தயாரித்து, அதன் செயல்பாடுகள் குறித்து 2 மாதங்களுக்குள் அறிக்கை அளிக்கும்படி குழுவின் தலைவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் விடுத்தார். 

ஒரே நேரத்தில் செயற்திட்டத்தை தயாரிக்கவும் அவர் அறிவுறுத்தினார். 2014-2015 காலத்தில் லங்கா சதொச நிறுவனத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட அரிசி இற்ககுமதி காரணமாக 6 பில்லியன் ரூபா நஷ்டம் ஏற்பட்டிருப்பதாகவும் இங்கு புலப்பட்டது. அரிசி இறக்குமதி செய்யப்பட்டு அவை காலவதியானமையால் விலங்குத் தீவணமாக விற்பனை செய்யப்பட்டிருப்பதாகவும் கலந்துரையாடப்பட்டது.

 இந்த சம்பவம் தொடர்பில் இதற்கு முன்னர் கணக்காய்வாளர் நாயகத்தினால் அறிக்கையொன்று தயாரிக்கப்பட்டிருப்பதாகவும், இதற்கு அமைய எதிர்காலத்தில் கலந்துரையாடல் நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டது. லங்கா சதொச நிறுவனத்தில் 2022ஆம் ஆண்டின் நஷ்டம் ஏறத்தாழ 600 மில்லியன் ரூபா என்றும் தலைவர் இங்கு சுட்டிக்காட்டினார். அத்துடன் 2021 டிசம்பர் 31ஆம் திகதியில் மொத்த நஷ்டம் 15 பில்லியன் ரூபாவுக்கு அண்மித்த பெறுமதி என்றும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4