எதிர்காலத்தில் டொலரின் பெறுமதி அதிகரிக்கும் - ஹர்ஷ டி சில்வா எச்சரிக்கை!

#SriLanka #Lanka4
Thamilini
2 years ago
எதிர்காலத்தில் டொலரின் பெறுமதி அதிகரிக்கும் -  ஹர்ஷ டி சில்வா எச்சரிக்கை!

எதிர்காலத்தில் டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி வீ்ழ்ச்சியடையும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா எச்சரித்துள்ளார்.

தற்போதைய மதிப்பீட்டின்படி 2048ஆம் ஆண்டளவில் டொலரின் பெறுமதி 1385 ரூபாவாக பதிவாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார். 

இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,  “இந்த நாட்டை அபிவிருத்தியடைந்த நாடாக மாற்றுவேன் என ஜனாதிபதி தெரிவித்திருந்தார். அவ்வாறு செய்வதற்கு வருடாந்தம் 6.5 வீத பொருளாதார வளர்ச்சியை எட்ட வேண்டும். 

அவ்வாறு செய்யாவிட்டால் 2048ஆம் ஆண்டு ஜனாதிபதி கூறிய இலக்கை எட்டவே முடியாது. அந்த இலக்கை அடைவதற்கு 2048ஆம் ஆண்டுக்குள் நாட்டின் தனிநபர் வருமானம் 13205 டொலர்களாக இருக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4