பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விசேட அறிவித்தல்

#SriLanka #Parliament #Member
Prathees
2 years ago
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விசேட அறிவித்தல்

பாராளுமன்றம் எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி காலை 9.30 மணிக்கு கூடும் என பாராளுமன்ற பொதுச் செயலாளர் குஷானி ரோஹணதீர அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.

 இது தொடர்பான கடிதம் நேற்றைய தினம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக நாடாளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் பணிப்புரைக்கு அமைய இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

 பாராளுமன்றத்தின் 16 நிலையியற் கட்டளைகளுக்கு அமைய பாராளுமன்றம் எதிர்வரும் ஜுலை 01 ஆம் திகதி சனிக்கிழமை காலை 09.30 மணிக்கு கூடும் என பிரதமர் தினேஷ் குணவர்தனவின் கோரிக்கைக்கு அமைய சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நேற்று விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4