69 இலட்ச மக்கள் பொம்மைகள் அல்ல - டலஸ் அழகப்பெரும!

#Lanka4
Thamilini
2 years ago
69 இலட்ச மக்கள் பொம்மைகள் அல்ல -  டலஸ் அழகப்பெரும!
69 இலட்ச மக்கள் பொம்மைகள் அல்ல என்பதை ஜனாதிபதி விளங்கிக்கொள்ள வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.  

நாவல பகுதியில் உள்ள சுதந்திர மக்கள் சபை காரியாலயத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.  

இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், 'இலங்கை பாராளுமன்ற வரலாற்றில் என்றும் இடம்பெறாத சம்பவங்கள்தான் தற்போது இடம்பெறுகிறன. நிறைவேற்றுத்துறை அதிகாரம் சட்டவாக்கத்துறையின் மேன்மையை மலினப்படுத்துகிறது.  

அரசாங்கத்தின் முறையற்ற அஸ்வெசும நலன்புரி திட்டத்துக்கு எதிராக நாட்டு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபடுகின்ற நிலையில் மக்களின் கவனத்தை திசை திருப்பும் வகையில் பாராளுமன்ற அமர்வு எதிர்வரும் சனிக்கிழமை (ஜூலை 1) இடம்பெறவுள்ளது. 69 இலட்ச மக்களின் ஆணை தவறாக பயன்படுத்தப்படுகிறது. 

69 இலட்ச மக்கள் பொம்மைகள் அல்ல என்பதை ஜனாதிபதி விளங்கிக்கொள்ள வேண்டும்' எனத் தெரிவித்துள்ளார். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4