கடன் மறுசீரமைப்பு செயல்முறையால் ஊழியர் சேமலாப நிதிக்கு பாதிப்பா? மத்திய வங்கி ஆளுநர் கருத்து

#SriLanka
Mayoorikka
2 years ago
கடன் மறுசீரமைப்பு செயல்முறையால் ஊழியர் சேமலாப நிதிக்கு பாதிப்பா? மத்திய வங்கி ஆளுநர் கருத்து

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு செயல்முறை காரணமாக EPF வைப்புத்தொகைக்கு செலுத்தப்படும் 09% வட்டி பாதிக்கப்படாது எனவும் EPF வைப்புத் தொகையில் கை வைக்கப்படாது எனவும் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க உறுதியளித்தார்.

 அதேபோல், உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு செயல்முறையிலிருந்து வங்கி அமைப்பு விடுவிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

 வங்கி அமைப்பு ஏற்கனவே 50% க்கும் அதிகமான வரிகள் மூலம் திறைசேரிக்கும் பொருளாதாரத்திற்கும் பங்களிப்பதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க விளக்கினார்.

 இன்று (29) முற்பகல் ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு தொடர்பான விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், 57 மில்லியன் வைப்பாளர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படுமென உறுதியளித்தார்.

 அதேபோல், உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்புச் செயல்முறையின் கீழ், மத்திய வங்கியின் பிடியில் இருக்கும் திறைச்சேரி உண்டிகள் மாத்திரம் 12.4% புதிய வட்டி வீதத்துடன் 2024 வரையிலும், 7.5% வட்டி வீதத்துடன் 2026 வரையிலும், மற்றும் 5% வட்டி வீதத்துடன் முதிர்வு வரையிலும் திறைச்சேரி பத்திரங்களாக மாற்றப்படும் என்று மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4