ருசியான வேர்க்கடலை பக்கோடா இப்படி செய்து பாருங்க!
#Recipe
#Cooking
#Tamilnews
#ImportantNews
Mani
1 year ago
தேவையான பொருட்கள்
1 கப் வேர்க்கடலை
2 டேபிள் ஸ்பூன் கடலை மாவு
2 டேபிள் ஸ்பூன் அரிசி மாவு மிளகாய் தூள் காரத்திற்கேற்ப
1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
1/4 டீஸ்பூன் பெருங்காயப்பொடி
2 டீஸ்பூன் எண்ணெய்
உப்பு தேவையான அளவு
செய்முறை
- தோலுடன் இருக்கும் வேர்க்கடலை தான் இதற்கு சுவையாக இருக்கும்.
- அடுத்து மைக்ரோவேவ் சேஃப் பவுலில் எண்ணெய் தவிர மற்ற அனைத்தையும் சேர்த்து கலந்து கொள்ளவும். தேவையெனில் ஒரு தேக்கரண்டி தண்ணீர் சேர்க்கவும்.
- மைக்ரோவேவை ஹையில் 6 நிமிடங்கள் செட் செய்யவும். பிறகு வேர்க்கடலை கலவையை 2 நிமிடங்கள் வைத்து எடுத்து, அதில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து கலந்துவிடவும்.
- பிறகு மீண்டும் 2 நிமிடங்கள் வைத்து எடுத்து மீதமுள்ள எண்ணெயைச் சேர்த்து கலந்துவிடவும்.
- மேலும் 2 நிமிடங்கள் வைத்தெடுத்து தட்டில் 2 நிமிடங்கள் ஆறவிடவும்.
- இப்பொழுது மொறுமொறுப்பான எண்ணெய் இல்லாத (மைக்ரோவேவ்) வேர்க்கடலை பக்கோடா தயார்
- தேவையெனில் கலந்த வேர்க்கடலை கலவையை எண்ணெயிலும் பொரித்து எடுக்கலாம்.