கிளிநொச்சியில் எரிவாயு அடுப்பிற்கு லைட்டர் பாவித்த பெண் உயிரிழப்பு

#SriLanka #Kilinochchi #Lanka4 #இலங்கை #லங்கா4
கிளிநொச்சியில் எரிவாயு அடுப்பிற்கு லைட்டர் பாவித்த பெண் உயிரிழப்பு

கிளிநொச்சியில் சமையலுக்கு லைட்டர் பாவித்ததனால் பெண்ணொருவர் அது வெடித்தன் பயனாக உயிரிழந்துள்ளார்.

கிளிநொச்சி, பளை இந்திராபுரத்தைச் சேர்ந்த ஜெயந்தன் கேதீஸ்வரி (வயது 33) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்

. கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு சமையலுக்காக எரிவாயு அடுப்பை லைட்டர் மூலம் பற்றவைக்க முயன்ற வேளையில் அது வெடித்து அணிந்திருந்த ஆடையில் தீப்பற்றியுள்ளது.

 எரிகாயங்களுக்கு இலக்கான நிலையில் பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், மேலதிக சிகிச்சைகளுக்காகக் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அங்கிருந்து யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று வியாழக்கிழமை உயிரிழந்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4