மரவள்ளி கிழங்கு பொடிமாஸ் செய்வது எப்படி

#Recipe #Cooking #Food #Tamilnews #How_to_make
Mani
1 year ago
மரவள்ளி கிழங்கு பொடிமாஸ் செய்வது எப்படி

தேவையான பொருட்கள்

  • 3 கப் மரவள்ளிக்கிழங்கு
  • 5 பல் பூண்டு
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 1/2 கப் பெரிய
  • 3 பச்சை மிளகாய்
  • 1/4 டீஸ்பூன் கடுகு
  • எண்ணெய் தேவையான அளவு
  • உப்பு தேவையான அளவு

செய்முறை

  • முதலில் உரலில் மிளகாய், பூண்டு, சீரகம் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக இடித்துக் கொள்ள வேண்டும்.
  • அதனுடன் வேக வைத்த மர வள்ளி கிழங்கு சேர்த்து இடிக்கவும். உடனே மசிந்து விடும். இதனையும் ஒரு பவுளில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  • பின்னர் அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு சேர்த்து வெடித்ததும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  • வெங்காயம் வதங்கியதும் கிழங்கு பூண்டு சீரகத்துடன் கலந்து பரிமாறலாம்.
  • இந்த இடித்த கிழங்கு, காஃபி-க்கு மிகவும் சுவையாக இருக்கும். எல்லா குழம்பு வகைகளுடன் கூட்டுக்கு சேர்த்து சாப்பிடவும் நன்றாக இருக்கும்.
  • சுவையான இடித்த மர வள்ளிகிழங்கு பொடிமாஸ் ரெடி.
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!