கொழும்பு துறைமுக நகரில் பெண்ணொருவரின் சடலம் மீட்பு!

#SriLanka #Colombo #Death
Mayoorikka
2 years ago
கொழும்பு துறைமுக நகரில் பெண்ணொருவரின் சடலம் மீட்பு!

கொழும்பு துறைமுக நகரின் கடற்கரையில் இனந்தெரியாத பெண்ணொருவரின் சடலம் காணப்படுவதாக கோட்டை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

 இறந்தவர் யார் என்பது இதுவரை அடையாளங்காணப்படாத நிலையில், சுமார் 4 அடி 9 அங்குல உயரம், பழுப்பு நிற சட்டை அணிந்துள்ளதுடன், அவரது தலைமுடி கழுத்து வரை வளர்ந்திருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 நீதவான் விசாரணைகளின் பின்னர் சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 இதற்கிடையில், தெஹிவளை பொலிஸ் பிரிவில் பீரிஸ் பிரதேசத்தின், கடலோர பகுதியில் சுயநினைவின்றி இருந்த நபர் ஒருவர் தெஹிவளை பொலிஸாரால் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.

 உயிரிழந்தவரின் அடையாளம் உறுதிப்படுத்தப்படவில்லை எனவும், அவர் சுமார் 55-60 வயதாக இருக்கலாம் என பொலிஸார் தெரிவித்தனர்.

 சடலம் களுபோவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், தெஹிவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4