வவுனியா இராணுவ முகாம் முன் தீக்குளிக்கச் சென்ற பெண்ணை காப்பாற்றிய பொலிஸார்

#SriLanka #Vavuniya #Police #Lanka4 #இலங்கை #பெண் #பொலிஸ் #லங்கா4 #வவுனியா #Rescue
வவுனியா இராணுவ முகாம் முன் தீக்குளிக்கச் சென்ற பெண்ணை காப்பாற்றிய பொலிஸார்

வவுனியா ஏ9 வீதியிலமைந்துள்ள வன்னி இராணுவ தலைமையலுவலகத்திற்கு முன்பாக இன்று காலை இரண்டு பிள்ளைகளின் தாயார் தீக்குளிக்கச் சென்ற நிலையில் வவுனியா பொலிஸாரல் காப்பாற்றப்பட்டுள்ளார்.

 இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குருநாகல் வரக்காப்பொல பகுதியில் வசித்து வரும் 34 வயதுடைய குறித்த பெண்ணிற்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

 இவர்களின் குடும்பத்தினுள் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இரண்டு பிள்ளைகளையும் தந்தை அழைத்துச்சென்று இருவரும் சில மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

 இந்நிலையில் குறித்த இரண்டு பிள்ளைகளின் தாயாருக்கும் வன்னி இராணுவ தலைமையக அலுவலகத்தில் பணியாற்றும் குடும்பஸ்தரான இராணுவ வீரருக்குமிடையே தொடர்பு ஏற்பட்டுள்ளது. 

எனினும் சில வாரங்களாக குறித்த இராணுவ வீரருடைய தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் விரக்தியடைந்த குறித்த குடும்ப பெண் அவரை தேடி வன்னி இராணுவ தலைமை அலுவலகத்திற்கு சென்ற போதிலும் குறித்த இராணுவ வீரரை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

 இதனையடுத்து அப் பெண் தலைமை அலுவலகத்திற்கு முன்பாக தீக்குளிக்க முற்பட்ட சமயத்தில் வவுனியா பொலிஸாரினால் அவர் காப்பாற்றப்பட்டு பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டார்.

 குறித்த பெண்ணிக்கு வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியினால் அறிவுரைகள் வழங்கப்பட்டதுடன் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4