மத்திய வங்கியின் வட்டி வீதங்களை குறைக்க தீர்மானம்

#SriLanka #Central Bank #Lanka4 #nandalal weerasinghe
Kanimoli
2 years ago
மத்திய வங்கியின் வட்டி வீதங்களை குறைக்க தீர்மானம்

மத்திய வங்கியின் நிலையான வைப்பு வசதி வீதம் (SDFR) மற்றும் நிலையான கடன் வசதி வீதம் (SLFR) ஆகியவற்றை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. நேற்று (05) நடைபெற்ற இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக மத்திய வங்கி வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 அதனபடி, நிலையான வைப்பு வசதி வீதம் (SDFR) மற்றும் நிலையான கடன் வசதி வீதங்களை 200 அடிப்படைப் புள்ளிகளால் முறையே 11 சதவீதம் மற்றும் 12 சதவீதமாக குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, சட்டரீதியான கையிருப்பு வீதத்தை நிலவும் 4.00% அளவிலேயே பேணுவதற்கு நாணயச் சபை தீர்மானித்துள்ளது.

 இதேவேளை, கடந்த மே மாதம் 31 ஆம் திகதியன்று, இலங்கை மத்திய வங்கியின் நாணய சபை தனது கொள்கை வட்டி வீதங்களை பாரியளவில் குறைக்க தீர்மானித்திருந்தது. அதன்படி, இலங்கை மத்திய வங்கியின் நிலையான வைப்பு வசதி வீதம் (SDFR) மற்றும் நிலையான கடன் வசதி வீதம் (SLFR) முறையே 250 அடிப்படை புள்ளிகளால் 13.00 சதவீதம் மற்றும் 14.00 சதவீதம் குறைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4