பொலிஸ் மா அதிபரை நியமிக்கும் போது அழுத்தங்களுக்கு அடிபணிய தயாராக இல்லை

#SriLanka #Police #Lanka4
Kanimoli
2 years ago
பொலிஸ் மா அதிபரை நியமிக்கும் போது அழுத்தங்களுக்கு அடிபணிய தயாராக இல்லை

பொலிஸ் மா அதிபரை நியமிக்கும் போது மதம் அல்லது வேறு எந்த அமைப்பினதும் அழுத்தங்களுக்கு அடிபணிய அரசாங்கம் தயாராக இல்லை என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் மதிப்பீட்டின் அடிப்படையில் உரிய நியமனம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

 ஸ்திரமான நாட்டிற்கு ஒரே பாதை என்ற தொனிப்பொருளில் ஜனாதிபதி ஊடக மையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் கருத்து தெரிவிக்கையில்; “ஒரு அரசாக, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நாட்டின் பாதுகாப்புக்காக ஒவ்வொரு ஆண்டும் மதிப்பீட்டு அறிக்கை பெறப்படுகிறது. இந்த மதிப்பீட்டில் பயங்கரவாதம், தீவிரவாதம், சட்டவிரோத நடவடிக்கைகள், புவிசார் அரசியல் மற்றும் குற்றத்தடுப்பு ஆகியவை அடங்கும். இந்த மதிப்பீட்டின்படி, தேசிய பாதுகாப்பு அடிப்படையில் நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது…”எனத்தெரிவித்தார்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4