சிங்கப்பூரில் இருந்து இங்கிலாந்துக்கு தப்பிச் சென்றுள்ள ஜெரோம் பெர்னாண்டோ

#SriLanka #Arrest #Police #Lanka4 #England
Kanimoli
2 years ago
சிங்கப்பூரில் இருந்து இங்கிலாந்துக்கு தப்பிச் சென்றுள்ள ஜெரோம் பெர்னாண்டோ

சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்ட ஜெரோம் பெர்னாண்டோ, சட்டவிரோத பணப்பரிவர்த்தனை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைகள் இந்நாட்டில் நடைபெற்று வரும் நிலையில், சிங்கப்பூரில் இருந்து இங்கிலாந்துக்கு தப்பிச் சென்றுள்ளார்.

 ஜெரோம் பெர்னாண்டோவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவின்படி, அவர் நேற்று (06) இங்கிலாந்தில் சேவையொன்றை நடத்தியதாகத் தெரிகிறது. “ஆயர் ஜெரோம் பெர்னாண்டோ ஜூலை 06 வியாழன் முதல் மூன்று நாட்களுக்கு ஐக்கிய இராச்சியத்தில் பணிபுரிவார்” என்று அந்த பதிவில் தெரிவிக்கின்றது.

 பௌத்தம், இஸ்லாம் மற்றும் இந்து மதம் குறித்து அவர் கூறிய சர்ச்சைக்குரிய அறிக்கைகள் குறித்து குற்றப் புலனாய்வுத் துறை விசாரணையைத் தொடங்கிய நிலையில், கடந்த மே 16ஆம் திகதி அவர் சிங்கப்பூருக்குத் தப்பிச் சென்றார். அதன்படி அவர் சிங்கப்பூரில் இருந்து இங்கிலாந்து சென்றுள்ளார். பின்னர், ஜெரோம் பெர்னாண்டோ மே 21 அன்று ஒரு நேரடி வீடியோவில் தனது கருத்துக்கள் மூலம் பௌத்தம், இந்து மதம் மற்றும் இஸ்லாம் மதத்திற்கு ஏதேனும் தீங்கு விளைவித்திருந்தால் மன்னிப்பும் கோரினார்.

 அதன் பின்னர் அவர் இலங்கைக்கு வராத நிலையில், கடந்த ஜூன் மாதம் 02ஆம் திகதி சிங்கப்பூரில் இருந்து மனைவி மற்றும் பிள்ளைகள் இலங்கைக்கு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெரோம் பெர்னாண்டோ விடயத்தில் இப்படி இருந்தாலும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு ICCPR சட்டத்தின் பிரகாரம் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நடாஷா எதிரிசூரிய 39 நாட்களுக்குப் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4